தமிழகத்தில் ஆணாக வாழ விரும்பும் தன்னை தந்தை அடித்து துன்புறுத்துவதாக திருமணமான பெண் ஒருவர் பொலிசில்புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த பொன் மாடசாமி என்பவரின் மகள் செல்வி(வயது 25), படித்து முடித்துவிட்டு செவிலியராக பணியாற்றி வந்த செல்வி ஆண்கள் போன்றே உடையணிந்து வலம் வந்துள்ளார்.
இதை மாடசாமி பலமுறை கண்டித்தும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை, இந்நிலையில் செல்விக்கு திருமணம் செய்து வைக்க அவரது தந்தை ஏற்பாடு செய்துள்ளார்.
பிறப்பால் பெண்ணாக இருந்தாலும் ஆண் தன்மையுடன் இருப்பதால் தனக்கு திருமணம் வேண்டாம் என கோரி செல்வி கூறியுள்ளார்.
இதை பொருட்படுத்தாமல் கடந்த 2018ம் ஆண்டு திருமணமும் செய்து வைத்துள்ளார், ஆனால் முதல் நாளே கணவனுடன் வாழவிருப்பமில்லாமல் செல்வி தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு பிறந்த பெண் குழந்தையும் மூன்று மாதத்தில் இறந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து செல்வியை கணவருடன் சேர்ந்து வாழ அவரது தந்தை தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததால் மனஉளைச்சலில் இருந்தவர் தற்போது பொலிசில் புகார் அளித்துள்ளார்.
அதில்,தந்தையிடமிருந்து பாதுகாப்பு அளிக்க கோரியும், திருநம்பியான தனக்கு படித்ததற்கு ஏற்ப அரசு வேலை வழங்க கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார்.