பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எழுந்துள்ள சின்னம் தொடர்பான பிரச்சனைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை தீர்வு காணப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான நவின் திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டார். இந்தநிலையில் இதயம் சின்னத்தை சமூக ஊடகங்கள் கேலிக்குள்ளாக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தம்மை பொறுத்தவரையில் தாம் இதயம் சின்னத்தின் கீழ் போட்டியிடப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்
ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னணி கட்சிகள் இதயம் சின்னத்தில் போட்டியிட்டால் தேர்தலில் பாரிய பின்னடையை சந்திக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றக்குழுவினால் தீர்மானம் எடுக்கமுடியாது. கட்சியின் செயற்குழுவே முடிவை எடுக்கமுடியும் என்று நவின் தெரிவித்தார்.
செயற்குழுவில் பெரும்பாலானோர் யானை சின்னத்தையே விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார்