சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாளுக்கு நாள் இறப்பு அதிகரித்து வரும் நிலையில், புதிய ஸ்மார்ட் போன் ஆப் ஒன்றை அந்நாடு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் கடந்த இரண்டு மாதங்களாக சீனாவை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 1370 பேர் உயிரிழந்துள்ளனர். 60,380 பேர் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் மனிதர்களிடமிருந்து எளிதாக பரவுகிறது என்பதால், இதைக் கட்டுப்படுத்த முடியாமல் சீனா தவித்து வருகிறது.
இந்நிலையில் சீனா புதிய ஸ்மார்ட் போன் ஆப் ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆப்பானது தங்களுக்கு அருகில் உறுதிபடுத்தப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கு அடிப்படையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கிறார்களா? இல்லையா என்பதை காட்டும் என்று கூறப்படுகிறது.
குறிப்பிட்ட ஆப்பிற்கு close contact detector என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதைப் பற்றிய தகவல் வெளியானவுடன் சுமார் 100 மில்லியன் சீன மக்கள் இது குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும், குறித்த ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆப்பிற்கு போன் நம்பர், நபரின் பெயர் மற்றும் ஐ.டி எண் போன்றவை தேவைப்படும். வரும் திங்கட் கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 6 மணிக்கு இந்த ஆப் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை China Academy of Information and Communications Technology உருவாக்கியுள்ளதாகவும், இதன் கிளை Xinhua-வில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இது, ஒன்று முதல் மூன்று கிலோ மீற்றர் தூரம் வெவ்வேறு முறையில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை சரிபார்க்க உதவும் என்று கூறப்படுகிறது.