பிரித்தானியாவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் இளவரசர் ஹரியின் முன்னாள் காதலியுமான கரோலின் ஃபிளாக் தமது குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
40 வயதான கரோலின் ஃபிளாக் பிரபல தொலைக்காட்சி தொடர்களான Love Island, The X Factor மற்றும் Jungle Camp உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
லண்டனில் உள்ள இவரது குடியிருப்பில் இருந்து நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த தகவலை உறுதி செய்த அவரது குடும்ப உறுப்பினர்கள், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தனது காதலரான 27 வயது லூயிஸ் பர்டன் என்பவரை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தலைப்புச் செய்தியாக மாறியதில் இருந்தே கரோலின் ஃபிளாக் மனமுடைந்து காணப்பட்டார் என கூறப்படுகிறது.
குறித்த தாக்குதலில் காயமடைந்த லூயிஸ் பர்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சம்பவத்திற்கு பின்னர் லூயிஸ் பர்டனை தொடர்பு கொள்வதற்கு கரோலின் ஃபிளாக் தடை செய்யப்பட்டிருந்தார்.
இருப்பினும் காதலர் தினத்தன்று தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இணைந்துள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, நான் உன்னை காதலிக்கிறேன் என பதிவிட்டிருந்தார் லூயிஸ் பர்டன்.
மேலும், லூயிஸ் பர்டனை தாக்கிய வழக்கு தொடர்பில் எதிர்வரும் 4-ஆம் திகதி கரோலின் ஃபிளாக் நீதிமன்ற விசாரணைக்காக ஆஜராக இருந்தார்.
கடந்த காலங்களில் தன்னைவிட வயது குறைவான இளைஞர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி வந்துள்ளார் கரோலின் ஃபிளாக்.
2002 காலகட்டத்தில் தன்னைவிட 15 வயது குறைவான Harry Styles என்பவருடன், பாலியல் தொடர்பான நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டதும், அந்த விவகாரம் பின்னர் பூதாகாரமாக வெடித்தது.
2009 காலகட்டத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரியுடன் ஏற்பட்ட நெருக்கம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அப்போது கரோலின் ஃபிளாக்கை விடவும் இளவரசர் ஹரிக்கு 5 வயது குறைவு என்பது மட்டுமின்றி, பொதுமக்களிடையே இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே, ஹரி தாமாகவே அந்த உறவை முறித்துக் கொண்டார் என கூறப்படுகிறது.
இளவரசர் ஹரியுடனான தமது உறவு, பிரிவு உள்ளிட்ட விடயங்களை பொதுவெளியில் விவாதிக்க தமக்கு அனுமதியில்ல அல்லது விலக்கப்பட்டுள்ளதாக சில மாதங்கல் முன்னர் கரோலின் ஃபிளாக் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.