இலங்கையின் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் கேள்வி எழுவதாக தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஷவேந்திர சில்வாவின் தடை குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதேபோல் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிக்கும் துரதிர்ஷ்டவசமான நிலைமை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள கருத்தை மனோ கணேசன் ஆதரித்துள்ளார்.
எனினும் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடையின் சூழ்நிலை தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்த சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான தடை நிச்சயமாக நடைமுறை அரசாங்கத்துக்கே வாய்ப்பாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டிள்ளார்.