ஜெனீவாவில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த எதிர்ப்பினைப் பதிவுசெய்தார்.
நாடு இன்று அழிவை நோக்கிப் பயணிப்பதாகவும், இதனிடையே சர்வதேவ தொடர்புகளை இழக்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.