கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மிக மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றதா சமுக்க ஆர்வர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் இச் செயற்பாடுகள் அரங்கேறிக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் திருகோணமலை மூதூர் கிழக்கில் மாத்திரம் பழங்குடி மக்களின் விவசாய நிலங்கள் 2000 ஏக்கர் வரை 2010 பின்னர் பறிக்கப்பட்டு அக்கிராமங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் கடந்த 2015,2016 இல் மூதூர் கிழக்கில் பாலக்காட்டுவெட்டை இப்போது இர்பான் நகராகவும், கோபாலபட்டனம் அறபாநகராகவும், வெந்தக்காட்டு வெட்டை,மலைமுந்தல், மாவடியூற்று ஆகிய கிராமங்கள் தாய்பூநகராவும்பெயர் மாற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மேலும் நில ஆக்கிரமிப்பவர்களுக்கு அவர்களுடைய அரசியல் தலைவர்கள் ஆதரவாக பின்நிற்பதாகவும், ஆனால் எங்களுடைய தமிழ் அரசியல் தலைவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.