தானியங்கி பணம் பெறும் கருவியில் மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பொலிஸரின் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட இருவரும் இந்தியர்களாவார். இவர்கள் இருவரும் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை ஒன்றின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் மோசடியான முறையில் தன்னியக்க கருவியில் இருந்து பணத்தை பெற்றபோதே கைதுசெய்யப்பட்டனர்.