வடமாகாண கல்வியமைச்சினால் கடந்த 10ம் திகதி 60 பேரிற்கு அதிபா் நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர்களில் 30 அதி பா்கள் மட்டுமே தமது பதவிகளை பொறுப்பேற்றுள்ள நிலையில், 30 அதிபா்கள் தம் கடமைகளை பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
மாகாணத்திலுள்ள பாடசாலைகள் பலவற்றிலுள்ள அதிபா் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட போட்டி பரீட்சையில் சித்தியடைந்த 60 பேருக்கு கடந்த 10ம் திகதி நியமனம் வழங்கப்பட்டது.
இந்த நியமனங்களில் அதிகமானவை வன்னி பாடசாலைகளுக்கானது.
இந்நிலையில் 30 அதிபா்கள் பதவியேற்றுள்ளதுடன் 30 அதிபா்கள் இன்னும் பதவியேற்றாமல் இருந்து வருகின்றனா்.
இதேவேளை நியமனம் வழங்கப்பட்ட 14 நாட்களுக்குள் பதவியேற்கவேண்டும் என கூறப்பட்டபோதும் தமக்கு யாழ்ப்பாணத்தில் நியமனம் கிடைக்கவில்லை என கூறி அவர்கள் பின்னடிப்பு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் உயா் அதிகாாிகளுக்கு தொிந்தவா்களுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தில் நியமனம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.
இதேசமயம் நியமனம் பெற்ற அதிபா்கள் சிலா் அமைச்சா்கள், நாடாளு மன்ற உறுப்பினா்களின் அலுவலக வாயில்களில் இடமாற்றம் கேட்டு
தவம் கிடப்பதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.