நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு வாக்கினை வழங்கிய கிராமிய மக்கள் இந்த முறை அவர்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் சக்திகளுடன் இணைய வேண்டும் என ஜே.வீ.பி கோரியுள்ளது.
ஜே.வீ.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயகக இதனை தெரிவித்துள்ளார்.
முன்னர் புதிய அரசாங்கம் ஒன்று உருவாகும் போது அதில் உள்ளவர்களும் மாறுப்படுவார்கள்.
எனினும் தற்போது அவ்வாறு புதிய முகங்கள் தெரிவதில்லை.
இந்த பொதுத் தேர்தலின் பின்னர் அந்த ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள பலர் மீண்டும் அரசாங்கத்துடன் இணைவார்கள்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அல்லது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்கியவர்கள் நாடு வீழ்ச்சி பாதைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தை உருவாக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதற்காக அந்த கட்சிககு வாக்களிக்கவில்லை.
அந்த மக்களின் எண்ணங்கள் எப்போதும் சிறந்ததொன்றாகும்.
எனினும் அந்த வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்களே மோசமானவர்கள்.
எனவே அனைவரும் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களுடன் மோதலுக்கு செல்ல வேண்டாம்.
அவர்களின் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் சிறந்த விடயமாகும்.
எனினும் அவ்வாறு அவர்களின் எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற கூடிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


















