பிரபல தொகுப்பாளினி மற்றும் நடிகையான அர்ச்சனாவின் மகள் சாரா சின்னத்திரையில் அதிகம் பிரபலம். டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவர் பங்கேற்று வருகிறார். அவர் தற்போது முதல் முறையாக சினிமாவில் நுழைகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து கோலமாவு கோகிலா பட புகழ் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தான் சாரா முக்கிய ரோலில் நடிக்கிறார்.
இதை உறுதி செய்யும் விதமாக அர்ச்சனா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “A loving director is the biggest blessing for a magical debut!! Thank you @nelsondilipkumar for keeping Zaara at her happiest always ❣️❣️#Doctor” என அவர் குறிப்பிட்டுள்ளார்.