இந்தியாவில் இன்று என்ன நடக்கிறதோ அதையே இலங்கையில் நடத்த இவர்கள் வேலைதிட்டங்களை முன்னெடுத்து செல்கிறார்கள் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி குறிப்பிட்டார்.
அதனாலேயே எல்லா விதமான பரிந்துரைகளும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசில் முஸ்லிம்களின் பள்ளிவாயல்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கம் ஆட்சி வந்தது முதல் தம்புள்ளை பள்ளிவாயலில் பிரச்சினை, மஹியங்கன பள்ளிவாயலில் பிரச்சினை, கெலியோய பள்ளிவாயலில் பிரச்சினை, போகம்பர பள்ளிவாயலில் பிரச்சினை, மஹர பள்ளிவாயலில் பிரச்சினை, சிலாபம் பள்ளிவாயலில் பிரச்சினை என அவர் மேலும் குறிப்பிட்டார்.



















