மாத்தறை – திக்வெல்ல பிரதான வீதியின் கொட்ட உட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (02) அதிகாலை திக்வெல்ல திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர், பத்தீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.