இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் சகோதரரான முத்தையா பிரபாகரன், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
எனினும், முத்தையா பிரபாகரன் எதிர்வரும் பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.