சிறிலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமவை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான “சமஹி பலவேகய”வில் இணைத்துக் கொள்ளுவதற்கான பேச்சுக்கள் நேற்று இடம்பெற்றுள்ளன.
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிம் மாக்கரின் இல்லத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார, எரான் விக்கிரமரட்ன உள்ளிட்டோரும் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் எம்.பியான குமார வெல்கம எம்.பி புதிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்ற பேரில் புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.