ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்காக எப்போதும் திறந்திருக்கும் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, கூட்டணியில் இணைந்து வெற்றிப் பயணத்திற்கு வலு சேர்க்குமாறும் ரணிலுக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன் ஐ.தே.கவின் அனுமதியுடனேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவித்த சஜித் , இதனை முன்னோக்கி கொண்டு செல்ல தேவையான பலம் தம்மிடத்தில் உள்ளதாகவும் கூறினார்
இதை முறியடிக்க எவராலும் முடியாது என்றும் ஏனெனில் ஜனநாயக ரீதியான பயணத்திலேயே நாம் ஒன்றிணைந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை ஏனைய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளலாம் என்றும் எந்த சமயத்திலும் அவர்களை பாதுகாக்க நாம் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் ஊழல் மோசடி கப்பம் பெறுபவர்களின் வலைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் தாய்நாட்டை விற்கும் செயற்பாடுகளுக்குள் செல்ல வேண்டாம் எனவும் சஜித் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் உத்தியோகப்பூர்வ தேர்தல் பிரசார தலைமை அலுவலகம் இன்று பத்தரமுல்லை – எதுல் கோட்டே பகுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.