உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியாக குறைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலையை குறைக்க முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இதனை தேசிய சேவை சங்க தலைவர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 97 ரூபாவுக்கும், டீசல் லீட்டாரின் விலை 57 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அரசாங்கம் இதுவரை விலை அவ்வாறான விலை குறைப்பு எதையும் செய்யவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.