ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் காரணமாக 15 வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இத்தாலியர்கள் மூவர், ஐக்கிய அரபு இராச்சியம், பிரிட்டன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஜேர்மனி, தென்னாபிரிக்கா, தன்சானியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 15 பேரும் தனிமைப்படுத்தப்டப்டுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜிய சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்பட்டமையினால் குறித்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதா சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.