யாழ்.நாவற்குழி பாடசாலை ஆசிாியர் ஒருவர் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது செம்மணி பகுதியில் மோட்டாா் சைக்கிளில் வந்த இரு கொள்ளையா்கள் ஆசிாியையின் தாலிக்கொடி மற்றும் சங்கிலியை அறுத்து சென்றுள்ளனா்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
திருநெல்வேலி மணல்தறை பகுதியில் வசிக்கும் குறித்த ஆசிரியர், பாடசாலை முடிந்து நேற்று மாலை 2 மணியளவில் சக ஆசிரியர் சகிதம் உந்துருளியில் பயணித்துள்ளார்.
இதன்போது இலக்கத் தகடுகள் இல்லாமல் மட்டையில் எழுதப்பட்ட இலக்ககத்துடன் மோட்டாா் சைக்கிளில் பயணித்த இளைஞர்களே திடீரென அருகில் சென்று ஆசிரியையின் தாலிக் கொடியினையும. சங்கிலியினையும் அறுத்துள்ளனர்.
இதன்போது ஆசிரியர் தடுக்க முற்பட்டபோதும் கழுத்தில் பலமாக தாக்கி அறுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.