யாழ்.எழுதுமட்டுவாழ் ஏ9 வீதிக்கருகாமையில் அமைந்துள்ள தும்புத்தொழிற்சாலையொன்று தீப்பற்றி எறிந்து தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
தும்புத்தொழிச்சாலைக்கு அருகாமையில் காணப்படும் காட்டிற்கு இனம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், காட்டிற்கு வைக்கப்பட்ட தீ தும்புத்தொழிச்சாலையிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்தினை இராணுவத்தினர், தென்மட்சி தீ அணைப்பு படையினர்கள் மற்றும் ஊர் வாசிகள் இணைந்து கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதேவேளை, தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.