உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது.
மேலும், இந்தியாவில் இதுவரை 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை கஸ்தூரிபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது நபர் பலியாகியுள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.