இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் முதலான நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து இலங்கை, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 51பேர், விசேட வைத்திய குழுவின் கண்காணிப்பின் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அவர்களில் ஒருவர் குணமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 220 பேர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்கள் 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு நிலையங்களில் 2 ஆயிரத்து 258 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.