நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுபடுத்துவதற்காக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் பொதுப்போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் இன்றும், நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவினை இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகம் அனைத்து சாலைகளிற்கும் வழங்கியுள்ளது.
பொதுப்போக்குவரத்தின் ஊடாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதனை கருத்தில் கொண்டே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயத்தினை வவுனியா சாலை முகாமையாளரும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.