இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் இன்று புதிததாக இருவர் கொரோனா பாதிக்கபட்டதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தற்போது மொத்தமாக 15 வைத்தியசாலைகளில் 243 பேருக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சீன பெண் உட்பட இலங்கையில் மொத்தமாக 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.