தூக்கிலிடப்பட்ட நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரின் கடைசி ஆசை கூட நிறைவேற்றப்படாமல் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதை அந்நாட்டு மக்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
இது ஒட்டு மொத்த தேசத்துக்கான நீதி என்று நிர்பயாவின் தாயார் கூறினார். இந்த வழக்கில் குற்றவாளிகளை தூக்கு தண்டனை வாங்கி கொடுத்த நிர்பயாவின் பெண் வழக்கறிஞரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், குற்றவாளிகளின் கடைசி ஆசை நிறைவேற்றப்படாமல் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அதாவது தூக்கிலிடப்படுவதற்கு முன்இன்று அதிகாலை குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு 5 மணி அளவில் தூக்குமேடைக்குக் கொண்டு வரப்பட்டனர். அதற்கு முன் அவர்களுக்கு டீ மற்றும் தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் அதை வேண்டாம் என்று கூறி, மறுத்துள்ளனர். அதே போல் அவர்கள் தங்களின் கடைசி ஆசையாக குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்று கோரியிருந்தனர். ஆனால் அந்த ஆசையும் நிறைவேற்றப்படாமல், குடும்பத்தினரை சந்திக்காமலே இறுதியில் தூக்கில் ஏற்றப்பட்டனர்.