இன்று வருகின்ற நோய்களின் எண்ணிக்கையை பார்த்தால் நம்மை அறியாமலே உள்ளுக்குள் பயம் வருகின்றது. சில வகையான நோய்கள் அறிகுறிகளை முன்கூட்டியே காட்டி விடும்.
ஆனால், சில வகையான கொடூரமான நோய்கள் உங்கள் உடலுக்குள் இருந்து கொண்டே இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும்.
இந்த வகையான நோய்கள் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. குறிப்பாக நோய்களில் புற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும்.
உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்னென்ன என்பதை இனி அறிவோம்.
நாம் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு புற்றுநோய்கள் ஏராளமான வகையில் உள்ளது. பொதுவாக புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்களால் உருவாகிறது.
இந்த செல்கள் பல நாட்கள் நம் உடலில் இருந்து கொண்டே வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். பிறகு உடல் முழுக்க இவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.
கணைய புற்றுநோய்
கணையங்கள் மிக முக்கிய உறுப்பாக கருதப்படுகிறது. உங்களின் கணையம் பாதிக்கப்பட்டால் செரிமான கோளாறு, ஹார்மோன்கள் குறைபாடு, சர்க்கரை அளவு அதிகரித்தல் போன்றவை ஏற்படும்.
கணையத்தில் புற்றுநோய் வந்தால் அடிவயிற்றில் வலி, வயிற்று உப்பசம், பசியின்மை போன்ற அறிகுறிகள் கடைசி கட்டத்தில் ஏற்படும். ஆனால், இதனை பலர் தொப்பை விழுந்துள்ளதாக சாதாரணமாக கருதுகின்றனர்.
ப்ரோஸ்டேட் புற்றுநோய்
ஆண்களை அதிகமாக தக்க கூடிய புற்றுநோய் வகைகளில் இது தான் முதலிடத்தில் உள்ளது. இந்த நோயின் அறிகுறிகள் தென்படுவது மிக கடினம்.
விந்தணுக்களுடன் சீழ் போன்று வருதல், பிறப்புறுப்பு வீங்குதல் போன்ற அறிகுறிகளை இவை இறுதியாக உணர்த்தும். அத்துடன் சிறுநீருடன் ரத்தமும் கலந்து வர கூடும்.
சிறுநீரக புற்றுநோய்
மிக கடினமாக கண்டறியப்படுகின்ற புற்றநோய் வகையை சார்ந்தது இது. ஆரம்ப நிலையில் எந்த ஒரு அறிகுறியையும் இது தருவதில்லை.
ஆனால், இறுதி தருவாயில் பின் முதுகு வலி, திடீரென்று உடல் எடை குறைதல், சிறுநீரகத்தில் ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட கூடும். இதை முதல் நிலையில் அறிவது மிக கடினமாகும்.
நுரையீரல் புற்றுநோய்
புகை பிடிப்பதாலே பாதிக்கும் மேற்பட்டோர்க்கு இந்த புற்றுநோய் வருகிறது. இதன் அறிகுறிகளும் பல நாட்கள் உடலில் ஊறியே பின்னரே தெரிய வரும்.
ஆரம்ப நிலையில் X-ray எடுத்து பார்த்தல் கூட இந்த புற்றுநோய் இருப்பதாக கண்டறிய முடியாதாம். அதிக இரும்பல், நீண்ட நாள் காய்ச்சல், மூச்சு திணறல் ஆகியவை இதற்கான அறிகுறிகளாகும்.
கருப்பை புற்றுநோய்
ஆண்களை போலவே பெண்களை பிரத்தியேகமாக தாக்க கூடிய கொடூரமான புற்றுநோய்களில் இதுவும் ஒன்று.
ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகளை கண்டறிவது மிக கடினம்.
இவை பெண்களின் பிறப்புறுப்புகளில் உண்டாக கூடும். மலத்தில் ரத்தம் வருதல், குடலில் பாதிப்பு போன்ற அறிகுறிகள் பின்னாளில் தென்பட கூடும்.
சார்க்கோமா
தசைகளிலும் எலும்புகளிலும் உருவாக கூடிய புற்றுநோய் இது. குறிப்பாக கொழுப்புகளிலும், மெல்லிய திசுக்களிலும், நரம்புகளிலும், ரத்த நாளங்களிலும் இவை ஊடுருவி இருக்கும்.
மேலும், தோலில் அடிப்பகுதியில் இவை உருவாகவும் கூடும். இவை எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் வரலாம்.
இதன் அறிகுறியை ஆரம்பத்தில் அறிய இயலாது.
கல்லீரல் புற்றுநோய்
மிக மோசமான நோய்களில் இதுவும் அடங்கும். கல்லீரலில் புற்றுநோய் உண்டாக்கினால் கண்டறிவது மிக கடினமாகும்.
முதலில் கல்லீரல் வீங்க தொடங்கி, புற்றுநோய் செல்கள் கல்லீரல் முழுவதும் பரவும். சிலருக்கு பரம்பரை ரீதியாகவும் இந்த நோய் வர கூடும்.
விறைப்பை புற்றுநோய்
20 முதல் 45 வயதுடைய ஆண்களுக்கு இந்த புற்றுநோய் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது.
விந்தணுக்களை உருவாகும் போது அதனுடனே புற்றுநோய் கிருமிகளும் உருவாகி உயிரை எடுத்து விடும். இதனை முதல் நிலையில் அறிவது மிக கடினம்.
மூளை புற்றுநோய்
மூளை மற்றும் தண்டு வடத்தில் இந்த புற்றுநோய் செல்கள் உருவாக கூடும். இவை இறுதி நிலையில் தான் தனது அறிகுறியை வெளிப்படுத்தும் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அடிக்கடி தலைவலி, பேசுவதில் தடுமாற்றம், மண்டை பகுதியில் புதுவித அறிகுறி இருந்தால் மூளை புற்றுநோய் என்று அர்த்தம்.