பிரான்சில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், அங்கு ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், பிரான்சில் நேற்று இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளார் என போலித்தகவல்கள் முகநூலில் சிலர் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் இவர் கொரோனா வைரஸ் காரணமாக இறக்கவில்லை எனவும் மாரடைப்பு காரணமாகவே இறந்ததாகவும் குடும்பத்தார் தகவல் வெளியிட்டுள்ளதுடன் பொய்யான தகவல்களை முகநூலில் பதிவு செய்து தமக்கு மன வேதனையை தர வேண்டாம் என குடும்பத்தார் இவ் இறப்பு தொடர்பில் தகவல் வெளியிட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் பிரான்ஸில் வசிப்பவருமான திருமதி மோகன் சித்திரா என்ற 52 வயதான குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கொரோனா தொற்றுக்கு இலக்காகி கடந்த 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.நடனேந்திரனின் சகோதரியுமாவார்.