யாழ்.பிலதெனியா தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் கலந்து கொண்ட அனைவரும் தங்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்குட்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டு போதகருக்கும் அவரைச் சந்தித்தவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த அவசர கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
அத்துடன் அப்போதகரின் தலைமையில் நடைபெற்ற ஆராதனை நிகழ்வில் பங்கெடுத்தவர்கள் தங்களது விபரங்களை அருகில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்களுடையதும் தங்களைச் சார்ந்த சமூகத்தினது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மிக அவசியமானது என சுட்டிக்காட்டிய அவர், தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது