இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.
இன்று பகல் வரை இந்த எண்ணிக்கை 87ஆக இருந்தது.
இந்த நிலையில் மேலும் 11 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 227 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.
அத்துடன், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 32 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3 ஆயிரத்து 290 பேர்வரை தங்கவைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.