உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘கொரோனா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது. அதற்கு பெற்றோரின் சம்மதத்துடன், குழந்தையின் மாமா நிதேஷ் திரிபாதி என்பவர் ‘கொரோனா’ என்று பெயர் சூட்டினார்.
மேலும், உயிரை பறிக்கும் வைரஸின் பெயரையா குழந்தைக்கு சூட்டுவார்கள் என்று பலரும் திரிபாதியிடம் உறவினர்கள் பலரும் கேள்வி கேட்க அதற்கு அவரோ, “கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. அது ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று வருகிறது. மக்களிடம் பல நல்ல பழக்கங்கள் ஏற்படுவதற்கு கொரோனா காரணமாக உள்ளது.
கொரோனாவால் உலக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். இந்தக் குழந்தை மக்கள் ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்து போராடுபவளாக இருப்பார்”. என்று பதில் அளித்திருக்கிறார்.
உலகம் முழுவதும் வைரலான இந்த வைரஸின் பெயரைக் கொண்ட குழந்தை தற்போது, உத்தரப்பிரதேசம் முழுவதும் பிரபலம் ஆகி விட்டது.