வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 190 ரூபாவை கடந்துள்ளது.
இதன்படி இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 190.61 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனாவின் தாக்கத்தால் இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.