கொரோனாவால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்குதல் தீவிரமாக இருக்கிறது. கொரோனாவுக்கு நாட்டில் இதுவரை 10 பேர் பலியாகி இருந்தனர். 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
#update: Despite our best efforts, the #COVID19 +ve Pt at MDU, #RajajiHospital, passed away few minutes back.He had medical history of prolonged illness with steroid dependent COPD, uncontrolled Diabetes with Hypertension.@MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020
தமிழகத்தில் கொரோனாவால் 18 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு முதலாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர் வெளிநாடு, வெளிமாநிலங்ககளுக்குச் செல்லாதவர் என்றும் கடுமையான நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தால் அவர் உயிரிழந்தார் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் தமிழகத்தில் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு.
கொரோனா தொற்று நோயின் தீவிர தாக்குதலைத் தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக இந்தியாவும் முடக்கப்படுகிறது. இது நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்தது.
சீனா, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைப் போல இந்தியாவிலும் கொரோனா வெகுவேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் தாக்கம் ஒவ்வொருநாளும் அதி தீவிரமாகி வருகிறது.
21 நாட்களுக்கு பொதுமக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டால்தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும்.
இதனையடுத்து நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக்டவுன் என்கிற முடக்கம் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் ஏற்கனவே நேற்று மாலை முதல் மார்ச் 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு முதல் லாக்டவுன் நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.