இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவது அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று இரவு 12 மணி முதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுவரை கொரோனா பாதிப்புக்காகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,09,163 ஆக உள்ளதாகக் கூறினார்.
மேலும், கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15,298 ஆக இருப்பதாகவும் கூறிய அவர், மொத்தம் 9,154 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளதாகவும் அதில் தற்போது 116 பேர் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
நியூசிலாந்து மற்றும் லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 55 வயதுடைய சைதாப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
#coronaupdate: 3 new cases for #covid19 in Chennai. 65Y M return from New Zealand at Pvt.Hosp, 55Y F Saidapet at #KMC. 25Y M return from London at #RGGH. Patients are in isolation & under treatment.@MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020