இத்தாலியில் வயதான தாயாரும் மகனும் உணவுக்கு வழியில்லை என அதிகாரிகளை உதவ வேண்டும் என கெஞ்சிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இத்தாலி மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பொதுமக்களிடையே பணப்புழக்கம் கடுமையாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் இத்தாலியின் அபுலியா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ளார்.
தங்கள் குடும்பத்திற்கு இருக்கும் ஒரே நிதி ஆதாரம், தமது வயதான தாயாருக்கு கிடைக்கும் ஓய்வூதியம் எனவும்,
தற்போது அடுத்த வேளை உணவுக்கே கை ஏந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வங்கியில் இருந்து தங்கள் பணத்தை கைப்பற்ற உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் பொலிசார் அவர்களுக்கு நிலைமையை புரிய வைத்து, அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 756 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 5,217 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 10,779 பேர் மரணமடைந்துள்ள நிலையில், மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97,689 என தெரியவந்துள்ளது.