இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் ஒருதொகை நிவாரண உதவிகளை வடமாகாண ஆளுனர் P.H.M சாள்ஸ் இடம் நேரடியாக கையளித்தனர்.
இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில் அவற்றினை அவர்கள் ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.
விசேடமாக இவ் உதவிகள் இறுதி யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தின் வன்னி,முல்லைத்தீவு,கிளிநொச்சி பகுதிகளுக்கு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.