தெலுங்கானா மாநிலத்தில் சிறிய கிராமம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது கிராமத்தை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கு வித்தியாசமான முயற்சியில் இறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மதனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா யாதவ்(23). கிராமத்தலைவராக பணியாற்றி வரும் இவர் பட்டதாரி ஆவார். இதனால் தனது ஊரின் எல்லைப்பகுதியில் காவல்காத்துக் கொண்டிருக்கின்றார்.
அதாவது வெளியாட்கள் உள்ளே வராமலும், உள்ளே இருப்பவர்கள் வெளியில் செல்லாமலும் எல்லைச்சாமியாக நின்று காத்து வருகின்றார். இவரின் செயலுக்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பெண் அகிலா கூறுகையில், இந்தியாவில் பிறப்பித்துள்ள லாக் டவுன் உத்தரவினை எங்களது கிராமம் ஆரம்பத்தில் கடைபிடிக்காமல் அசால்ட்டாக இருந்தனர். அதன் பின்பு தான் இவ்வாறு காவல் காக்க ஆரம்பித்தேன்.
வெளியாட்களை உள்ளே அனுமதிக்கவில்லை. உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்வதற்கான காரணத்தினைக் கேட்டு தேவையிருந்தால் மட்டுமே அனுப்புகிறேன்.
ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிட்டாலும், பரவிவிடும் என்பதால் கவனமாக செயல்படுகிறோம். தங்களது கிராமத்தில் 1600 பேர் இருக்கின்றனர். 2000 முகக்கவசங்கள் விநியோகம் செய்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறோம் என்று எல்லைச்சாமியாக நிற்கும் இளம்பெண் கூறியுள்ளார்.