யாழ்ப்பாணம், அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவா்கள் எவரும் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படவில்லை.
எனவே ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவாா்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளாா்.
இது குறித்து மேலும் அவா் கூறுகையில்,
அாியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகருடன் பழகிய 346 போ் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.
குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் தாவடியில் 163 குடும்பங்கள் மற்றும் காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 20 பேரும் உள்ளடங்கலாக 319 போ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பேரும், மன்னாா் மாவட்டத்தில் 4 பேரும், வவுனியா மாவட்டத்தில் 8 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேரும் என மாகாணத்தில் 346 போ் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.
இம் மாதம் 6ம் திகதிவரை இவா்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் நடைமுறையில் இருக்கும். இதுவரையில் தனிமைப்படுத்தலில் உள்ள எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை. எனவே 6ம் திகதியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவாா்கள்.