நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, நாடெங்கும் ஊரடங்கு அமுலில் உள்ளது.
இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஓளடதங்களை பெற்றுக்கொள்வதில், மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் மருந்தகங்களும் நாளை (02.04,2020), நாளை மறுதினம் (03.04,2020) மற்றும் எதிர்வரும் திங்கட் கிழமை (06.04.2020) திறக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


















