அரியாலையில் மத ஆராதனைக்கு சென்ற யாராவது இதுவரை தம்மை பதிவு செய்யாமலிருந்தால், உடனடியாக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் விடுத்துள்ளார்.
மார்ச் மாதம் 15ம் திகதி அரியாலையிலுள்ள பிலதெனியா தேவாலயத்தில், சுவிசிலிருந்து வந்த போதகரினால் நடத்தப்பட்ட மத ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் தம்மை பதிவு செய்யுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதையடுத்து, ஆராதனையில் கலந்து கொண்ட பலர் தம்மை பதிவு செய்திருந்தனர்.
எனினும், ஆராதனையில் பங்கெடுத்த சிலர் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிற நிலையில் அவர்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகிறமுன்னெடுக்கபட்டுள்ளது.
இந்த நிலையில், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



















