கேகாலை, ரம்புக்கன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடிகம பிரதேசத்தில் பொது சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் மீது கத்திக்குத்து தாகுதல் மேற்கொள்ளபட்டிருந்தது.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் இன்று மாலை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இதேவேளை கத்திக்குத்துக்கு இலக்காகிய அதிகாரி தொடர்ந்தும் ரம்புக்கன மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியிருந்த நிலையில், பிரதேச மக்களின் உதவியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.