யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் 15 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் எவருக் கும் தொற்று இல்லை. என வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
அரியாலை மத போதகருடன் தொடர்பில் இருந்த 8 பேர் நாவாந்துறைப் பகுதியில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதணை செய்யப்பட்டது.
அதே போன்று பருத்தித்துறையை சேர்ந்த ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் உள்ள 6 பேரும் பரிசோதிக்கப்பட்டனர்.
இருப்பினும் பரிசோதணை மேற்கொள்ளப்பட்டவர்களில் ஒருவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பணிப்பாளர் மேலும் தகவல் வெளியிட்டார்.