சீனாவில் இருக்கும் மர்மமான வுஹான் வைரஸ் ஆய்வகத்தின் அரிதான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதன் உள்ளே இருக்கும் ஆய்வாளர்கள், விண்வெளி வீரர்கள் போன்று உடையணிந்திருப்பதை பார்க்க முடிகிறது.
கொரோனா வைரஸின் துவக்க இடம் என்று கூறப்படும் சீனாவில் இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
ஆனால் இங்கிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸால் ஒரு சில நாடுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் போயுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சீனாவின் மர்மமான ஆய்வகம் என்று கூறப்படும், வுஹான் நகரில் இருக்கும் Wuhan Institute of Virology ஆய்வாகத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சுமார், 1,500-க்கும் மேற்பட்ட கொடிய வைரஸ்களை வைத்திருக்கும் இந்த ஆய்வகம், மிகவும் ஆபத்தான நோய்க்கிருமிகளை ஆராய்ச்சி செய்வதில் நிபுணத்துவம் பெற்றது. குறிப்பாக வெளவால்களை வைத்து மேற்கொள்ளப்படும் வைரஸ்கள்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த நகரத்தில் கொரோனா வைரஸ் பரவியது.
இந்த ஆய்வகத்தில் ஏற்பட்ட பிழை காரணமாக கொரோனா வைரஸ் தோன்றியதாகவும், அது வுஹானின் ஒரு சந்தையில் உணவாக விற்கப்படும் காட்டு விலங்குகளிடமிருந்து வைரஸ் மனிதர்களிடம் பரவியுள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அவர்களில் சிலர் இதை SARS-CoV-2 எனவும் இந்த வைரஸ் அங்கு வடிவமைக்கப்பட்ட ஒரு உயிரியல் போர் ஆயுதமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் குறித்த வைரஸ் ஆய்வகத்திலிருந்து தப்பித்ததாக சந்தேகிக்கின்றனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எல்லாம் சீனா மறுத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநரான ஷி ஜெங்லி பெப்ரவரி மாதம் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, கொரோனா பரவலுக்கும், ஆய்வகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தார்.
இந்த தொற்றுநோய் 91,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளதுடன் உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளதால், கடந்த 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் குறித்த ஆய்வகத்தின் உட்புறத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதில், அங்கிருக்கும் ஆய்வாளர்கள் சோதனைகளை மேற்கொள்ளும் போது, முழு உடல் பாதுகாப்பு மற்றும் தலை கவசங்களுடன் இருப்பதை பார்க்க முடிகிறது.
கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் SARS நோயால் பாதிக்கப்பட்ட பின்னர், சீன அதிகாரிகள் இந்த நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்தனர்.
இந்த SARS 775 பேரைக் கொன்றதுடன், உலகளவில் 8,000-க்கும் அதிகமானவர்கள் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர்.
அதன் படி மொத்தம் 300 மில்லியன் யுவான் மதிப்பில் இந்த ஆய்வகத்தை கட்டி முடிக்க சீனாவிற்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டது. இந்த கட்டிடத்தை பிரான்ஸை சேர்ந்தவர்கள் வடிவமைக்க உதவியுள்ளனர்.
இந்த ஆய்வகத்தின் நான்காவது மாடியில் இருக்கும், P4- மிக உயர்ந்த உயிர் பாதுகாப்பு நிலை கொண்டது. சீனாவில் மிகவும் மேம்பட்ட ஆய்வகமாக Wuhan Institute of Virology உள்ளது.
ஆய்வகத்தின் கட்டுமானம் கடந்த 2015-ல் முடிந்தது. அதன் பின் பல்வேறு பாதுகாப்பு ஆய்வுகளில் தெரிவு பெற்ற பின்னர், அதிகாரப்பூர்வமாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் திகதி திறக்கபட்டது.
இந்த ஆய்வகத்தில் இருக்கும் P4-ஐ அங்கிருக்கும் ஊடகம் ஒன்று, சீனாவின் வைராலஜி விமானம் தாங்கி என்று பெயரிட்டது. ஆபத்தான நோய்க்கிருமிகளை ஆராய்ச்சி செய்யும் திறன் கொண்டது என்று அரசு நடத்தும் செய்தித்தாள் ஒன்று கூறியது.
வுஹானில் இரண்டு பெரிய வைரஸ் ஆய்வகங்கள் உள்ளன.
இங்கு ஹூனான் கடல் உணவு மொத்த சந்தையிலிருந்து 10 மைல் தொலைவில் Wuhan Institute of Virology அமைந்துள்ளது. இது தான் கொரோனா வைரஸின் தொடக்க புள்ளியாக நம்பப்படுகிறது.
அதே போன்று நகரத்தின் இரண்டாவது நிறுவனம், Wuhan Centre for Disease Control(வுஹான் நோய் கட்டுப்பாட்டு மையம்) இது சந்தையில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது.