• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

கொரோனா கட்டுப்படுத்த சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள் வழிகாட்டுகிறார்கள்.

Editor by Editor
April 10, 2020
in இந்தியச் செய்திகள், செய்திகள்
0
கொரோனா கட்டுப்படுத்த சீனா வாழ் இந்திய விஞ்ஞானிகள் வழிகாட்டுகிறார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பூமிப்பந்தில் உள்ள அத்தனை பேருக்கும் இப்போது ஒரே ஒரு எதிரிதான் பொதுவான எதிரி.
இந்த எதிரிக்கு பெயர், கொரோனா வைரஸ்! இந்த எதிரியை வீழ்த்திக்காட்ட வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. அதனால்தான் இந்த ஒற்றை எதிரிக்கு எதிராக உலகளாவிய போர் தொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் எதற்கும் அஞ்சாமல், தனது ஆதிக்கத்தை நாளுக்கு நாள், பல நாடுகளிலும் இந்த எதிரி வலுப்படுத்திக் கொண்டே போவதுதான் உலகுக்கே புரியாத புதிராக இருக்கிறது.

கொரோனா வைரஸ், சீன நாட்டில் பரவத்தொடங்கியதுமே அங்கு வாழ்ந்து வந்த இந்தியர்கள் குறிப்பாக வேலை பார்த்து வந்தவர்கள், படித்து வந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் எங்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்றுதான் குரல் கொடுத்தனர். பயம், பீதி, தவிப்பு அத்தனையும் அவர்களிடம் வெளிப்பட்டது.

இதையடுத்து சீன அரசுடன் இந்தியா தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு வாழ்ந்து வந்த சுமார் 700 இந்தியர்களை இருமுறை ஏர் இந்தியா விமானங்களில் அழைத்து வந்து சேர்த்தது. இங்கே இரு வார காலம், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டபோதும்கூட, “தாய் மண்ணில் கால் பதித்ததே போதும், இதுவல்லவா சொர்க்கம்” என அந்த இந்தியர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.

அதே நேரத்தில் “ம்கூம், நாங்கள் இந்த மண்ணை விட்டு வர மாட்டோம், இங்கே இருந்து கொரோனா வைரசை சமாளித்து காட்டுவோம்” என்று சொல்லிக்கொண்டு, அந்த வைரஸ் தோன்றிய உகான் நகரில் இன்றும் வசித்து வருகிற இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களின் துணிச்சலுக்கு என்ன விருது கொடுத்து பாராட்டுவது என்றே தெரியவில்லை.

அவர்கள் இப்போது சொல்கிறார்கள்.

“எங்கள் வாழ்வில் இந்த 76 நாட்களும் கடினமான தருணங்கள். இந்த புதன்கிழமைதான் நாங்கள் வசிக்கிற உகான் நகரில் ஊரடங்கு விலக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. எங்கள் 76 நாள் துன்பம் முடிந்து இப்போதுதான் மகிழ்ச்சி பிறந்திருக்கிறது” என்று சிரிக்கிறார்கள்.

உகான் என்பது, 1 கோடியே 10 லட்சம் பேர் வாழ்கிற நகரம். கொரோனா வைரஸ் என்ற எதிரிக்கு பயப்படாமல், நெஞ்சில் உரத்துடன் உகான் நகரில் வாழ்ந்து வருகிற இந்தியர்களில் ஒருவர்தான், நீரியல் உயிரி துறை விஞ்ஞானி, அருண்ஜித் டி சத்ரஜித். இவர் கேரளாவை சேர்ந்தவர்.

“73 நாட்களாக நான் என் அறையில்தான் அடைபட்டுக் கிடந்தேன். இப்போதுதான் வெளியே வந்துள்ளேன். அடைபட்டுக் கிடந்த கால கட்டத்தில் நான் யாருடனும் அதிகமாக பேசவில்லை. எல்லோருமே தங்கள் தங்கள் அறைகளில் அடைபட்டுக் கிடந்ததால் என்னுடன் பேசுவதற்கே ஆள் இல்லை. எனவே இப்போது பேசுவதற்கே கஷ்டப்படுகிறேன்” என்கிறார் இந்த அருண்ஜித் டி சத்ரஜித்.

ஏன் தாய்நாடு திரும்பவில்லை?

பிறகு ஏன் அவர் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை?

அவரே சொல்கிறார்.

“டிசம்பர் இரண்டாவது வாரத்தில்தான் உகானில் ஒரு கொடிய வைரஸ் தோன்றி பரவி வருகிறது என்று எனக்கும், எனது நண்பர்களுக்கும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து மக்களிடம் பீதி நிலவியது. எல்லோரும் முக கவசங்களை அணியத் தொடங்கினார்கள்.

பொதுவாகவே ஒரு இடத்தில் கஷ்டம் ஏற்படுகிறபோது, அங்கிருந்து வருவது என்பது, அதில் இருந்து தப்பிப்பது போலாகும். அப்படி செய்வது இந்தியர்களுக்கு அழகு இல்லை. எனவேதான் நான் இங்கேயே இருந்து துணிச்சலுடன் போராடுவது என முடிவு செய்தேன்.

அது மட்டுமல்ல, நான் ஊர் திரும்பினால், அது எனது மனைவி, குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, என் அப்பா, அம்மா, மாமனார், மாமியார் என அத்தனை பேருக்கும் ஆபத்தானது என்றும் நினைத்தேன்.

இந்தியா 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது, சரியான செயல்தான்.

ஆனால் பருவமழை காலத்தில் மக்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறபோது அது பிரச்சினையை ஏற்படுத்தும். அந்த நேரத்தில் இந்த வைரஸ், மேலும் அபாயகரமானதாக மாறக்கூடும்.

இந்த உகான் நகரம் வழங்கும் பாடம், கண்டிப்பான ஊரடங்கு உத்தரவை பின்பற்றியதும், மக்கள் தங்களைத்தாங்களே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதும்தான்.

இப்போது ஊரடங்கை விலக்கிய பின்னரும்கூட, அறிகுறிகள் இல்லாமலேயே அந்த வைரஸ் தாக்குகிறது என்று தகவல்கள் வெளியாகி இருப்பதால் மக்கள் இன்னும் வீடுகளை விட்டு ெ-ளியே வர தயங்குகிறார்கள்.

கொரோனா வைரசைப் பொறுத்தமட்டில் அதைப்புரிந்து கொள்ளுவது என்பது எளிதானது அல்ல. முதலில் யாருக்கு தாக்கியது என்பதை கண்டறிகிற வரையில் இந்த வைரசைப் பற்றி அறிவதும் கடினம்தான்.

ஆரம்பத்தில் சீனர்கள் இதைப்பற்றி தெரியாததால் வழக்கம்போல இயங்கினர். ஆனால் அதைப்பற்றி தெரிய வந்ததும் அதற்கேற்ப செயல்பட ஆரம்பித்தனர்”.

இவர் கூறுவதை அப்படியோ எதிரொலிக்கிறார், அதே உகானில் வசித்து வருகிற பெயர் கூற விரும்பாத மற்றொரு இந்திய விஞ்ஞானி. அவர் சொல்வது-

“நான் எனது அறையில் 72 நாட்கள் அடைபட்டுக் கிடந்தேன். என் பக்கத்து வீட்டுக்காரருக்கு 3 சின்னக் குழந்தைகள். அவர்கள், அவர்களது வீட்டில் இருந்து ஒரு முறைகூட வெளியே வந்ததை நான் பார்க்கவில்லை.

இன்றைக்கு நான் உயிர்பிழைத்து நிம்மதியாக இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால் இன்றைக்கும் நான் வெளியே பழையபடி செல்ல விரும்பவில்லை. இந்த வைரசை பரப்ப அது ஒரு வழியாகி விடலாம்.

நான் இந்திய மக்களுக்கு சொல்வதற்கு ஒரு ஆலோசனை உண்டு. ஊரடங்கை நீங்கள் அனைவரும் கண்டிப்புடன் பின்பற்றுங்கள்.

இதே உகானில் சில தினங்கள் முன்கூட்டியே ஊரடங்கு போட்டிருந்தால் காட்டுத்தீ போல இந்த வைரஸ் பரவுவதை தடுத்து இருக்க முடியும்.

இங்கு எனக்கு நல்லதொரு விருந்தோம்பல் அனுபவம் கிடைத்தது. எனது முதலாளி, எனது உள்ளூர் நண்பர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது” என்கிறார்.

கொரோனா வைரஸ், உகானில் உள்ள கடல் உணவுப் பொருட்கள் விற்பனை செய்கிற சந்தையில் இருந்துதான் தோன்றியதாக இதுவரை நம்பப்படுகிறது.

இந்த வைரஸ், உகானில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்தது.

ஒட்டுமொத்த சீனாவுக்கும் இது பரவியபோதும் அங்கு உயிர்ப்பலி எண்ணிக்கை என்னவோ 3 ஆயிரத்துக்கு சற்று அதிகம்தான்.

அங்கு பலி குறைந்திருக்க காரணம், அவர்கள் ஊரடங்கை கடைப்பிடித்து வந்த பாங்குதான் என்பதை இந்த விஞ்ஞானிகளின் அனுபவத்தில் இருந்து அறிய முடிகிறது.

இதை இங்கே வாழ்கிற ஒவ்வொருவரும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஊரடங்குதானே, 144 தடை உத்தரவுதானே என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டால் அதற்கு கொடுக்கக்கூடிய விலை அதிகமாகி விடும்.

ஊரடங்குக்கு அடங்குவது விவேகம்.

Previous Post

கொரோனா வைரஸ் காரணமாக ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் உரிமையாளர்!

Next Post

லண்டனில் ‘கொரோனா’வுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலி!

Editor

Editor

Related Posts

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு
இலங்கைச் செய்திகள்

க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

December 19, 2025
இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை – பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை – பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்

December 19, 2025
நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை
இலங்கைச் செய்திகள்

நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை

December 19, 2025
காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
இலங்கைச் செய்திகள்

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து
இலங்கைச் செய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
Next Post
லண்டனில் ‘கொரோனா’வுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலி!

லண்டனில் ‘கொரோனா’வுக்கு மேலும் ஒரு இந்திய டாக்டர் பலி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்

December 19, 2025
க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

க்ரீன் கார்ட் லோட்டரி ;இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய டிரம்பின் முடிவு

December 19, 2025
இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை – பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்

இலங்கையில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை – பெருந்தொகை பணத்துடன் பேருந்தை திருடிய கும்பல்

December 19, 2025
நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை

நாடாளுமன்ற உணவகத்தில் உணவு தட்டுப்பாடு! அர்ச்சுனா கோரிக்கை

December 19, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy