மக்களுக்கு எந்தளவுக்கு நிவாரணங்களை வழங்கினாலும் அவற்றில் அவர்கள் திருப்தியடையாது விமர்சிப்பார்கள் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
“ பல நிவாரணங்களை பெறும் நபர்கள் தமக்கு கிடைத்த நிவாரணங்கள் குறித்து எப்போதும் யாரிடமும் கூறுவதில்லை. கிடைத்தது தொடர்பாகவும் மகிழ்ச்சியடைவதில்லை. வேறு ஒருவருக்கு அந்த நிவாரணம் கிடைத்தாலும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.
தம்மிடம் எவ்வளவு இருந்தாலும் மற்றவருக்கு ஏதேனும் கிடைத்தால், அது தமக்கும் வேண்டும் என்று விமர்சிப்பார்கள். எவ்வளவு நிவாரணங்களை வழங்கினாலும் எந்த விதத்தில் வழங்கினாலும் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளும் விமர்சனம் மாத்திரமே எஞ்சும்.
இதனை புரிந்துக்கொண்டு பணியாற்ற வேண்டுமே அன்றி வேறு மாற்று வழியில்லை” என காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட தலைவரும் அமைச்சருமான டளஸ் அழகப் பெரும கருத்து வெளியிட்டிருந்த பின்னணியில் காஞ்சன விஜேசேகர தனது முகநூலில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.