கொரோனா தொற்றை இனங்காண்பதற்கான 20 ஆயிரம் உபகரணத் தொகுதிகள் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜெக் மா மன்றம் மற்றும் அலிபாபா மன்றம் என்பன ஒன்றிணைந்து இந்த உபகரணத் தொகுதிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளன.
129,011 அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த மருத்துவ உபகரணங்கள் தொகுதிகள், அவர்களின் இலங்கைப் பிரதிநிதிகளினால் கடந்த 16ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டன.
நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இந்த உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.