இலங்கையில் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுப்பதற்கான ஒழிப்பு நடவடிக்கையில் வெளிநாட்டுப் படையொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவிலிருந்து படையினர் இலங்கைக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்தியப் படையினர் இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளுக்கு கொரோனா தொற்று தடுப்பு செயற்பாடுகளுக்காக சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் ஒழிப்பு செயற்பாட்டிற்கு இந்திய இராணுவம் களத்தில் குதிக்கவுள்ளதாக வெளியாக செய்திகளை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுத்துள்ளது.
இந்தியாவின் பி.டி.ஐ செய்திச் சேவை, இந்திய இராணுவத்தினரில் ஒரு பகுதியினர் கொரோனா தொற்று ஒழிப்பிற்காக இலங்கை, மாலைதீவு, ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய அயல்நாடுகளுக்கு செல்வதாக நேற்று செய்தி வெளியிட்டது.
எனினும் இந்தியப்படை இலங்கைக்கு வருவது குறித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் இன்று கருத்து வெளியிட்டுள்ளது.
இதன்போது அப்படியொரு தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவிக்கிறது.


















