வெலிசறை கடற்படை முகாமின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
ஏற்கனவே அவருக்குக் கொரோனா தொற்றியுள்ளதா என்பதைக் கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது எனவும், அதன்போது அவர் தொற்றுக்குள்ளாகியிருக்கவில்லை எனவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.
இந்த மரணம் குறித்து ஆராயப்பட்டு முறையான தகவல் பின்னர் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.