ஸ்ரீலங்காவில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பிலியந்தலை,சித்தமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் 82 வயது மதிக்கத்தக்க முதியவரே நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த முதிவர் நேற்று முன்தினம் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு சுகயீனம் தீவிரமாகிய நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அவருக்கு நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் அவரின் உடல் இன்று உடஹமுல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
அவர் வசித்த பிலியந்தலை, சித்தமுல்ல பகுதியில் சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



















