தமிழகத்தில் பல பெண்களை மிரட்டி சொகுசு வாழ்க்கை வந்த இளைஞன் காசியின் லேப்டாப்பில் 80 வீடியோக்கள் மற்றும் சில புகைப்படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி(26). சென்னையில் உள்ள கல்லூரியில் பி.ஏ முடித்துள்ள இவர், கோழிக்கடை உரிமையாளர்.
இவர் சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்த போது, சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் பழக்கம் ஏற்பட்டு அவருடன் நெருக்கமாக இருந்துவிட்டு அதன் பின் அந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வைத்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்துள்ளான்.
பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு, சிவப்பு நிறம், ஆடம்பரமான ஆடைகள், விலை உயர்ந்த பைக்குகளுடன் உலா வருதல் என பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து மயங்கிய இளம்பெண்கள் பலர், காசியின் காதல் வலையில் விழுந்தனர்.
அப்படி பள்ளி மாணவிகள் முதல் என பல பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையை சீரழித்ததால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெண் மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் இவர் பொலிசாரிடம் சிக்கினார்.
அதன் பின் இவரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எப்படி இத்தனை பெண்களை தன்னந்தனியாக வீழ்த்த முடிந்தது என்பது பற்றி, தனிப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், காசியின் லேப்டாப்பில் 80 வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் உள்ள சில வீடியோக்கள் பார்ப்பதற்கு அதிர்ச்சிகரமானதாக உள்ளது. பல தரப்பட்ட பெண்களுடன் மிகவும் ஜாலியாக தனது வாழ்க்கையை கழித்து இருக்கிறார்.
இவரிடம் சிக்கி ஏமாந்த இளம்பெண்கள் பலர், வசதி படைத்தவர்களாகதான் தெரிகிறார்கள். எனவே, காவலில் எடுத்து விசாரித்தால் வீடியோவில் உள்ள பெண்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், இவரிடம் விமான பணிப் பெண் ஒருவரும் ஏமாந்துள்ளார். பள்ளி தோழியான இருவரும் நாகர்கோவிலில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் படித்துள்ளனர்.
சென்னையில் விமான பணிப்பெண்ணுக்கான படிப்பில் இருந்தபோதுதான் மீண்டும் காசியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் 1.50 லட்சமும், 16 கிராம் தங்க நகைகளையும் வாங்கி விட்டு, தோழியை ஏமாற்றியுள்ளார். பணத்தை திரும்ப கேட்க, ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டியுள்ளார். இதை ரகசியமாக இதை வைத்திருந்த அந்த தோழி இப்போது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.