கொரோனா வைரஸ் பரவலினால் நாட்டில் தற்போது நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் பின்பற்றவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சு ஆலோசனை கோவையொன்றை வெளியிட்டுள்ளது.
காய்ச்சல், இரத்தப்போக்கு, கடுமையான தலைவலி, மூச்சுத்திணறல், பார்வைக் குறைபாடு, வலிப்பு, நெஞ்சு மற்றும் வயிறு வலி, குழந்தையின் அசைவு குறைவடைகின்றமை, வீக்கங்கள் அல்லது ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் மருத்துவ பரிசோதனைக்கு முன்னர் முன்பதிவு செய்தல் அவசியம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.